மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இளையோர் சங்கத்தின் ஏழாம் கட்டப் பதிவிற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
19 AUG 2026 6:58PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, இளையோர் சங்கம் ஏழாம் கட்ட இணையவழிப் பதிவிற்கான கடைசி தேதியை 2026 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. இந்தக் கால நீட்டிப்பு, நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள இளைஞர்கள், தனித்துவமான இளையோர் பரிமாற்றத் திட்டத்தில் பதிவு செய்து பங்கேற்கக் கூடுதல் வாய்ப்பை வழங்கும்.
உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், என்எஸ்எஸ் / என்ஒய்கேஎஸ் போன்ற அமைப்புகளின் தன்னார்வலர்கள், இளம் தொழில் வல்லுநர்கள் உட்பட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்கள், https://ebsb.aicte-india.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ள வகைசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இளையோர் சங்கம் ஏழாம் கட்டப் பதிவிற்கான கடைசி தேதி 2026 ஆகஸ்ட் 18-ஆக இருந்தது.
ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள், என்ஐடி உள்ளிட்ட 20 உயர்கல்வி நிறுவனங்கள், இந்தப் பரிமாற்றத் திட்டத்தை நடத்தவும், ஒருங்கிணைக்கவும் முக்கிய மைய நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் வரையிலான (பயண நாட்களைத் தவிர்த்து) கல்வி, கலாச்சாரச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வார்கள். இந்தப் பயணங்களின் போது, உள்ளூர் மரபுகள், கல்வி நிறுவனங்கள், நிர்வாக நடவடிக்கைகள், புத்தாக்கச் சூழல் அமைப்புகள், தொழில்துறைகள், பாரம்பரியச் சின்னங்கள், சமூக வாழ்க்கை முறை ஆகியவை குறித்து நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301300®=3&lang=1
(Release ID: 2301300)
****
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2301391)
आगंतुक पटल : 9