பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்

प्रविष्टि तिथि: 19 AUG 2026 2:34PM by PIB Chennai

கொல்கத்தாவில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தில், தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கொல்கத்தாவில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இத்துயரச் சம்பவத்தில், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது:

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301110&reg=3&lang=1

-----

SS/ SV/SH    


(रिलीज़ आईडी: 2301298) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam