தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தில்லியில் மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு பேர் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக விசாரணை மேற்கொள்கிறது
प्रविष्टि तिथि:
19 AUG 2026 12:41PM by PIB Chennai
தில்லி முனிர்கா பகுதியில் மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு பேரை இரண்டு நபர்கள் தாக்கியது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து அது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. தாக்கப்பட்டவர்களில் ஒருவர் தலையில் பலத்தக் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தில்லி காவல்துறை ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை காயம் அடைந்தவர்களின் உடல்நிலை உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய பிரச்சனைக் காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக 2026 ஆகஸ்ட் 14 அன்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301084®=3&lang=1
***
SS/IR/SU/KR
(रिलीज़ आईडी: 2301167)
आगंतुक पटल : 7