சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நாட்டில் 121 சுங்கச் சாவடிகள் அருகே வசிப்பவர்களுக்கு டிஜிட்டல் ஃபாஸ்டேக்கைப் பெறுவதற்கான வசதி அறிமுகம்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 4:38PM by PIB Chennai
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வை, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டில் 121 சுங்கச் சாவடிகள் அருகே வசிப்பவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஃபாஸ்டேக்கைப் பெறுவதற்கான வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, உள்ளூர்மக்கள் போக்குவரத்திற்கான மாதாந்திர அனுமதியை ராஜ்மார்க்யாத்ரா மொபைல் செயலி மூலம் பெற முடியும். இதனால் சுங்கச் சாவடிகளுக்கு நேரடியாக செல்வதும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதும் தவிர்க்கப்படும். மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் தடையின்றி செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ராஜ்மார்க்யாத்ரா மொபைல் செயலி மூலம் குறிப்பிட்டச் சுங்கச் சாவடிகளுக்கு 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் இந்த டிஜிட்டல் அனுமதியைப் பெறமுடியும். இதனால் உள்ளூர்மக்கள் மாதம் முழுவதும் சம்மந்தப்பட்ட சுங்கச் சாவடிகள் வழியாக எந்நேரமும் சென்று வர முடியும்.
தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோர் சம்மந்தப்பட்டச் சுங்கச் சாவடிகளின் பட்டியலை https://rajmargyatra.nhai.gov.in/buy-fastag-local-pass என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300851®=3&lang=1
***
SS/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2300981)
आगंतुक पटल : 6