மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஐந்தாவது செமிக்கான் இந்தியா மாநாட்டை புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 3:47PM by PIB Chennai
ஐந்தாவது செமிக்கான் இந்தியா மாநாடு புதுதில்லி யசோபூமியில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு, கண்காட்சி மையத்தில் செப்டம்பர் 17 – 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் முக்கிய மைல்கல்லாக இந்த மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசு, தொழில்துறை தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்கின்றனர்.
செமிக்கான் இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் மூலம் நாட்டின் செமிகண்டக்டர் உற்பத்தி குறிப்பிடத்தக்க வகையில உத்வேகம் பெற்றுள்ளது. இந்தியாவில் வலுவான செமிகண்டக்டர் உற்பத்திக்கான சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கில், செமிக்கான் 1.0 என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அடுத்த 12 ஆண்டுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செமிக்கான் 2.0 என்ற திட்டத்தின் கீழ் அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை அடிப்படைத் தொழிலாக அங்கீகரித்துள்ள மத்திய அரசு 332-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 105 புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன வடிவமைப்புக் கருவிகளை வழங்குவதன் மூலம், ஆராய்ச்சி, புத்தாக்கம், வடிவமைப்பு ஆகிய துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகையுடன் கூடிய திட்டத்தின் கீழ் 24 புத்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது புதுமைக் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முக்கிய பயன்பாடு சார்ந்த பணிகளை மேற்கொள்ள உதவுகிறது.
தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாட்டின் வலுவான முழுமையான செமிகண்டக்டர் உற்பத்திக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு இத்தகைய முயற்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300831®=3&lang=1
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2300961)
आगंतुक पटल : 9