குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உத்தராகண்டில் ஆகஸ்ட் 19,20-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 1:23PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உத்தராகண்டில் 2026 ஆகஸ்ட் 19, 20 ஆகிய 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 19 அன்று டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமிக்குச் செல்லும் குடியரசு துணைத்தலைவர் அங்கு 2025-27-ம் ஆண்டு பிரிவைச் சேந்த இந்திய வனப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் உரையாட உள்ளார்.
ஆகஸ்ட் 20 அன்று முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் 2024-ம் ஆண்டு பிரிவுக்கான இரண்டாம் கட்ட ஐஏஎஸ் பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
அப்போது சர்தார் வல்லபாய் படேல், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300777®=3&lang=1
***
SS/IR/SM/KR
(रिलीज़ आईडी: 2300863)
आगंतुक पटल : 9