பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2026 9:40PM by PIB Chennai

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மீராபாய் சானு தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று பிரதமர் கூறினார். தொடர்ச்சியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றதுடன், தனது பெயரில் ஒட்டுமொத்தமாக நான்கு காமன்வெல்த் பதக்ககங்களைக் கைப்பற்றி, ஒவ்வொரு இந்தியருக்கும் அவர் தொடர்ந்து ஊக்கமளிப்பவராகத் திகழ்கிறார் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு பிரதமர் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

திறமை மிக்க மீராபாய் சானு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை தங்கப்பதக்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக 4 பதக்கங்களை வென்றுள்ள அவர், ஒவ்வொரு வீரருக்கும் உத்வேகம் அளிப்பவராகத் திகழ்கிறார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.

***

Release ID: 2289707

SS/SV/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2300817) வருகையாளர் எண்ணிக்கை : 24