வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், தேசிய தொழில் வழித்தட மேம்பாடு, செயலாக்க அறக்கட்டளையின் உயர்மட்டக் கண்காணிப்பு ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
17 AUG 2026 8:54PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய தொழில் வழித்தட மேம்பாடு மற்றும் செயலாக்க அறக்கட்டளையின் உயர்மட்டக் கண்காணிப்பு ஆணையத்தின் மூன்றாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், தொழில் வழித்தட மேம்பாட்டின் அடுத்த கட்டத்திற்கான முன்னுரிமைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், சரக்குப் போக்குவரத்து போட்டித்திறனை வலுப்படுத்துவதற்கும், உலகலாவிய போட்டித்தன்மை வாய்ந்த தொழில்துறை சூழலியலை உருவாக்குவதற்கும் இந்திய அரசின் உத்திசார் நடைமுறைகளில் தொழில்துறை வழித்தடங்கள் ஒரு முக்கியத் தூணாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். திட்ட ஒப்புதல்களைத் தாண்டி, உள்கட்டமைப்பை உரிய நேரத்தில் நிறைவு செய்தல், நில ஒதுக்கீடு, முதலீடு, உற்பத்தித் துவக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் வலியுறுத்தினார். நிலம், இணைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு வசதிகள், சட்டப்பூர்வ அனுமதிகள், சிறப்பு நோக்க நிறுவனங்களின் அதிகாரங்கள் தொடர்பான தடைகளைத் தீர்க்குமாறு அவர் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார். பிரதமரின் விரைவுசக்தித் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த திட்டமிடலின் அவசியத்தையும், முதலீட்டாளர்களுக்கு உகந்த நில ஒதுக்கீட்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தொழில் வழித்தட திட்டங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்து அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தி, திட்டங்களை வேகமாகவும், விளைவுகளை மையமாகக் கொண்டும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய நீர்வழிகளைத் தொழில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைப்பதன் அவசியத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் வலியுறுத்தினார். மேலும், வழித்தட மேம்பாட்டிற்கு நீர்வழிகளை ஒரு சாத்தியமான முதுகெலும்பாக ஆராயுமாறும் அவர் யோசனை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300658®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2300690)
आगंतुक पटल : 7