தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் குறித்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார், தலைமைத் தேர்தல் ஆணையர்

प्रविष्टि तिथि: 17 AUG 2026 7:41PM by PIB Chennai

இந்தியத் தேர்தல் ஆணையம், பாட்னாவில் இன்று நடைபெற்ற "தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் மற்றும் இசிஐநெட்" குறித்த மாநாட்டில், தேர்தல் எழுத்தறிவு மன்றங்களின் புதிய கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இந்த மாநாட்டில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், ஜனநாயகச் செயல்பாடுகளில் மக்கள் விழிப்புணர்வுடன் பங்கேற்பதை ஊக்குவிப்பதிலும் கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றலாம் என்று குறிப்பிட்டார்.

 

 

நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவில் தேர்தல்கள் இந்திய அரசியலமைப்பு, சட்டங்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி மிகத் துல்லியமாகவும், அனைத்துக் கட்டங்களிலும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் கண்காணிப்புடன் வெளிப்படையாகவும் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார். இந்தியாவின் தேர்தல் முறை, ஜனநாயக மாண்புகள், வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள், இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இளம் குடிமக்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு ஞானேஷ் குமார், தேர்தல் செயல்முறையில் அவர்களின் நம்பிக்கையும் விழிப்புணர்வுடன் கூடிய பங்கேற்பும் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தேர்தல் எழுத்தறிவு மன்றத்தின் புதிய சின்னமும் வெளியிடப்பட்டது. "ஜனநாயகத்தைக் கற்போம்; ஜனநாயகத்தை வழிநடத்துவோம்" என்ற புதிய வாசகம், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் ஜனநாயகம் பற்றி புரிந்துகொள்வதுடன், அதில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்று, அதன் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவும் ஊக்குவிக்கும் நோக்கத்தை வலுப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாளந்தாவில், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுடனான  கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார்  கலந்து கொண்டார். ஆகஸ்ட் 16–17 ஆகிய தேதிகளில் பீகாரில் மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின்போது, ​​மதுபானி, வைஷாலி, நாளந்தா ஆகிய இடங்களிலும் அவர் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300623&reg=3&lang=1

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2300680) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati