உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐதராபாத் இப்ராஹிம் பட்டிணத்தில் ஆயுதப்படையினருக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை மத்திய இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 17 AUG 2026 4:13PM by PIB Chennai

ஐதராபாத் இப்ராஹிம் பட்டிணத்தில் உள்ள சகஸ்த்ர சீமா பால் (எஸ்எஸ்பி) வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வகை மூன்றைச் சேர்ந்த 48 தனி குடும்பக் குடியிருப்புகளை மத்திய உள்துறை இணைமையச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி  தலைமை இயக்குநர் திரு சஞ்சய் சிங்கால், உள்துறை அமைச்சக உயரதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

மத்திய ஆயுதக் காவல்படையினரின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவது மோடி அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். எஸ்எஸ்பி-ல் 10,029 குடியிருப்புகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 1,273 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை இணையமைச்சர், இக்குடியிருப்புகள் வெறும் கட்டடங்களாக மட்டுமின்றி, நாட்டின் சேவை, பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்த எஸ்எஸ்பி வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் நலனில் மத்திய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடையாளம் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300458&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2300609) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu