பிரதமர் அலுவலகம்
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
17 AUG 2026 1:32PM by PIB Chennai
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் விரைந்து உதவி செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;
"மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து கவலையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவுகிறது."
***
Release ID: 2300361
SS/IR/LD/SH
(रिलीज़ आईडी: 2300574)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam