சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் சுற்றுச்சூழல் பணிக்குழுக் கூட்டம் புதுதில்லியில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 16 AUG 2026 9:11AM by PIB Chennai

இந்தியா, 12-வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தை 18.08.2026 அன்று புதுதில்லியில் நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக, நாளை (17.08.2026)  பிரிக்ஸ் சுற்றுச்சூழல் பணிக்குழுக் கூட்டமும், பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சிக்கான குழுவின் மூத்த அதிகாரிகள் கூட்டமும் தொடங்க உள்ளது. இக்கூட்டம், இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் முதன்மைக் கருப்பொருளான - ' மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நீடித்த நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல் ' என்பதன் அடிப்படையில் நடைபெறும்.

பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகிப்பார். இக்கூட்டம், உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும், ஒருமித்த கருத்தை வளர்ப்பதற்கும், சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளத்தை வழங்கும்.

முதல் நாளில் நடைபெறும் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில், தொடக்க அமர்வும்  பிரிக்ஸ் சுற்றுச்சூழல் பணிக்குழுவின் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெறும்.

இரண்டாம் நாள், இறுதி அறிக்கை மீதான அமைச்சர்கள் நிலையிலான கலந்தாய்வுகளும், கருப்பொருள் அடிப்படையிலான கலந்துரையாடல்களுடன் இடம்பெறும். தலைமைப் பொறுப்பின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் சுற்றுச்சூழல் பணிக்குழுக் கூட்டத்தில் இந்தியா நான்கு முன்னுரிமைப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.

அவை:

முன்னுரிமை I: நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல்

முன்னுரிமை II: காடு வளர்ப்பு, காட்டுத்தீ மேலாண்மை, பேரிடர் மீள்திறன்

முன்னுரிமை III: சுழற்சிப் பொருளாதாரம்

முன்னுரிமை IV: பருவநிலை நடைமுறைகளை ஏற்று நடத்தல்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300088&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300156) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam