PIB Backgrounder
பாதுகாப்புத்துறையின் வலிமை: தற்சார்பு மூலம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துதல்
प्रविष्टि तिथि:
14 AUG 2026 4:44PM by PIB Chennai
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது. வலுவான, தற்சார்புமிக்க, உலகளவில் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், முதலீடுகள், உள்நாட்டு புத்தாக்க முயற்சிகள் நாட்டின் பாதுகாப்புத் திறன்களைப் மேம்படுத்தியுள்ளன. இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இந்த விழிப்புணர்வு நாட்டின் இறையாண்மைக்கு அரணாகத் திகழ்வதோடு உலகளாவிய பாதுகாப்புக்கும் உறுதுணையாக விளங்குகிறது.
பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2013-14-ல் 2.53 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2026-27-ல் 7.85 லட்சம் கோடி ரூபாயாக (3.1 மடங்கு) அதிகரித்துள்ளது. மூலதனச் செலவினமும் 94,587.95 கோடி ரூபாயிலிருந்து 2.19 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பலனாக நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி 2025-26-ல் 1.78 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை படைத்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 76 சதவீதமாகவும் தனியார் துறையின் பங்களிப்பு 24 சதவீதமாகவும் உள்ளது.
பாதுகாப்புத் துறை ஏற்றுமதியும் கடந்த 12 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2013-14-ல் 686 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி 2025-26-ல் 38,424 கோடி ரூபாயாக உயர்ந்து 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அரசின் தொடர்ச்சியான கொள்கை நடவடிக்கைகளால் பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களும் புத்தொழில் நிறுவனங்களும் பெருமளவில் பங்கேற்று வருகின்றன. தேஜஸ் ரக போர் விமானங்கள், இலகுரக ராணுவ ஹெலிகாப்டர்கள் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் நாட்டின் போர்த் திறனை மேம்படுத்தியுள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருவதுடன், ஏவுகணைச் சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் முதலீடுகளை ஈர்த்து உள்நாட்டு விநியோகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகின்றன. எதிர்கால பாதுகாப்புத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் தொடர்ச்சியாக முதலீடு செய்து வரும் இந்தியா, 2047-க்குள் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்ட உலகளாவிய பாதுகாப்புத்துறை வல்லரசாக உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டு உறுதியுடன் பயணித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299449®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2299696)
आगंतुक पटल : 8