நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காப்பீட்டு வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளுக்கு நிதி சேவைகள் துறை முன்னுரிமை வழங்குகிறது

प्रविष्टि तिथि: 14 AUG 2026 3:15PM by PIB Chennai

நாடு முழுவதும் காப்பீட்டுச் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களது குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் தொடர்பான செயல்முறைகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது. நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முறைப்படுத்தப்பட்ட குறைதீர்ப்பு வழிமுறைகள், வாடிக்கையாளரின் புள்ளி விவரங்கள் தொடர்பான தகவல்கள் மீதான தெளிவான புரிதல் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம் காப்பீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காண உதவிடும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய நடைமுறைகளைக் கட்டாயமாக்கியுள்ளது.

காப்பீட்டுத்தொகை உரிமைக் கோரல் நிராகரிப்பு, காப்பீட்டுத்தொகையை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், தவறான பாலிசிகளை விற்பனைச் செய்வது, பிற காப்பீடு சேவைகள் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்கள் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, காப்பீடு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கையாளும் வகையில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் பாலிசிதாரர் பாதுகாப்பு, குறைதீர்ப்பு, கோரிக்கைத் தொடர்பான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.

காப்பீட்டுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் இணையதளம், நேரடித் தொடர்பு, அழைப்பு மையம் போன்றவற்றின் மூலம் பெறப்படும் குறைகள் தொடர்பான புகார்கள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் புகார் மேலாண்மை அமைப்பில் பதிவு செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காப்பீட்டு நிறுவனங்களின் புகார் மேலாண்மை அமைப்பு, பீமா பரோசா இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடமிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் புகார் பெற்றவுடன் அதற்கு 14 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299382&reg=48&lang=2

****

TV/SV/GS/SH


(रिलीज़ आईडी: 2299675) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Malayalam