குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 3:34PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது, சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடைபெறும் கல்வி, இலக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார்.

 

ஆகஸ்ட் 16 அன்று தமது பயணத்தின் போது, குடியரசுத் துணைத் தலைவர் செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்குளத்தூரில் நடைபெறும் எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்பக் நிறுவனத்தின் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) 22-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

 

நாகாலாந்து, மணிப்பூர், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான திரு இல. கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, சென்னை, தி நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெறுகிறது. அதிலும் அவர் கலந்துகொள்கிறார்.

 

பின்னர், சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி அரங்கில் நடைபெறும், இந்து முன்னணியின் நிறுவனரான மறைந்த திரு கே. ராமகோபாலனின் சிந்தனைகள், எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட 'Echoes of a Nationalist Mind' (தேசியவாத சிந்தனையின் எதிரொலிகள்) என்ற நூல் வெளியீட்டு விழாவில் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்,  கலந்துகொள்கிறார்.

 

ஆகஸ்ட் 17 அன்று, திருவாரூரில் நடைபெறும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.

 

அதன் பிறகு அவர், தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299396&reg=3&lang=1

(Release ID : 2299396)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299660) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam