பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி செங்கோட்டையில் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள்

प्रविष्टि तिथि: 13 AUG 2026 4:46PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஆகஸ்ட் 15 அன்று தில்லியில் உள்ள செங்கோட்டையிலிருந்து 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகிக்கவுள்ளார். இந்த மாபெரும் நிகழ்வானது, 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலின் நீடித்த பாரம்பரியத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையிலும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இளைஞர் சக்தியின் ஆற்றலைக் கொண்டாடும் வகையிலும் அமையவுள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களின் போது, 'வந்தே மாதரம்' பாடல் முதல் முறையாக இசைக்கப்படும்.

செங்கோட்டைக்கு பிரதமர் வந்தடைந்ததும், அவரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் அமைச்சர் திரு சஞ்சய் சேத், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். அதன்பிறகு, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடுவார்.

 பின்னர், பிரதமர் செங்கோட்டையின் கொத்தளத்துக்குச் செல்வார். அங்கு அவரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், முப்படைகளின் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகியோர் வரவேற்பார்கள். தேசியக் கொடியை ஏற்றுவதற்காக, தில்லி பகுதி தளபதி பிரதமரை கொத்தளத்தில் உள்ள மேடைக்கு அழைத்துச் சென்ற பின் பிரதமர் கொடியேற்றுவார்.

பொது வசதி

உடைமைகள் வைக்கும் அறை வசதி :  சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக ஆறு இடங்களில் 25 உடைமைகள் வைக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உதவி மையத்தில் உள்ள தன்னார்வலர்கள் : என்.சி.சி-யைச் சேர்ந்த 100 பேர் மற்றும் 'மை பாரத்' அமைப்பைச் சேர்ந்த 100 பேர் என மொத்தம் 200 தன்னார்வலர்கள், காவல்துறையினருடன் இணைந்து பார்வையாளர்கள் வளாகங்களைச் சென்றடைய உதவுவார்கள்.

சக்கர நாற்காலிகள் வழங்குதல் : சக்கர நாற்காலிகளின் உதவி தேவைப்படும் அனைத்துப் பார்வையாளர்களுக்காகவும், மெட்ரோ நிலையங்களிலும் வாகன நிறுத்துமிடங்களிலும் என்.சி.சி. மாணவர்கள் இருப்பார்கள்.

மெட்ரோ சேவைகள் : மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றடைவதற்காக, ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 4 மணி முதல் மெட்ரோ சேவை இயக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் :

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298957&reg=3&lang=1

(Release ID : 2298957)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299262) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Malayalam , English , Urdu