சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
கடுகு சாகுபடி பரப்பளவின் அடிப்படையில் 26 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
13 AUG 2026 8:44AM by PIB Chennai
இந்தியாவின் உயிரியல் வளங்களைப் பயன்படுத்தி வர்த்தக ரீதியிலான பத்து கடுகு ரகங்களை உருவாக்கிய பயனீர் ஓவர்சீஸ் கார்ப்பரேஷனிடமிருந்து அணுகல் பயன் பகிர்வு நிதியாக ரூ.15.52 கோடியைத் தேசிய பல்லுயிர் ஆணையம் விடுவித்துள்ளது. இந்தத் தொகை 26 மாநில உயிரி பல்லுயிர் வாரியங்களுக்கும், 3 யூனியன் பிரதேச உயிரி பல்லுயிர் குழுமங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் கடுகு சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவின் அடிப்படையில் இந்தப் பங்கு கணக்கிடப்படும்.
பயனீர் ஓவர்சீஸ் கார்ப்பரேஷன் இந்த பத்து ரகங்களை தமது சொந்த ஆய்வகங்களில் உருவாக்கியது. ஆனால், அதன் மரபு தொகுப்புகள் வெளிப்படையான சந்தை, வர்த்தகர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். இதற்கான ஆதாரமாக, ஒரு விவசாயி அல்லது சமூகத்தை அடையாளம் காணமுடியாத நிலையில், இந்நிகழ்வுகளில் அணுகல் பயன் பகிர்வு நிதியை வழங்குவதற்கு வழிமுறைகளை உருவாக்க தேசிய உயிரி பல்லுயிர் ஆணையம், நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
நிபுணர் குழு பரிந்துரைத்த வழிமுறைகளுக்கு ஆணையம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இடைத்தரகர்கள் மூலம் உயிரி வளங்கல் பெறப்படும்போது அணுகல் பயன் பகிர்வு நிதி, மாநில உயிரி பல்லுயிர் வாரியங்கள், யூனியன் பிரதேச பல்லுயிர் குழுமங்களுக்கிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298712®=3&lang=1
***
SS/IR/PS/KR
(रिलीज़ आईडी: 2298833)
आगंतुक पटल : 20