மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உமாங் தளத்தின் மூலம் மத்திய அரசின் 880 சேவைகள்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 1:40PM by PIB Chennai
உமாங் தளத்தின் மூலம் மத்திய அரசின் 880 வகையான சேவைகள் வழங்கப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்துள்ள அவர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உமாங் மற்றும் டிஜிலாக்கர் செயலிகள் மூலம் பல்வேறு அரசு சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். உமாங் தளத்தில் 11.66 கோடி பயனர்கள் பதிவு செய்துள்ளதாகவும். டிஜிலாக்கர் தளத்தில் 72.43 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களிலும் தொலைதூரப் பகுதிகளிலும் இணைய வசதியை மேம்படுத்தும் வகையில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் கிராம பஞ்சாயத்து அளவில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றில் 70,000-க்கும் மேற்பட்ட மையங்கள் பெண்களால் நிர்வகிக்கப்படுவதாகத் தெரிவித்தார். உமாங் மற்றும் டிஜிலாக்கர் தளத்தின் சேவைகள் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் வழங்கப்பட்டுவருவதாக அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298116®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2298586)
आगंतुक पटल : 10