பாதுகாப்பு அமைச்சகம்
அடுத்த தலைமுறை கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் அறிமுகம்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 7:40PM by PIB Chennai
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில், ஸ்ருதி எனும் அடுத்த தலைமுறை கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் 2026 ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது முன்னிலையில் கடலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கடற்படையின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் கப்பல் கட்டும் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த அடுத்த தலைமுறை கடலோரக் காவல்படை ரோந்து கப்பல்களைக் கட்டும் பணி கோவா, கொல்கத்தா என இரு வெவ்வேறு கப்பல் கட்டும் தளங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் இந்தக் கப்பல்கள்; கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடலோரச் சொத்துகளின் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் நிவாரணம் மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்புப் பணிகள் போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளில் தற்போதைய கடலோரக் காவல் கப்பல்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் இக்கப்பல்களுக்கு பெயரிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நான்கு வேதங்களைக் குறிக்கும் 'ஸ்ருதி' என்ற பெயர் இக்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297905®=3&lang=1
செய்தி அடையாள எண் 2297905
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2297997)
आगंतुक पटल : 10