உள்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் மத்திய ஆயுதப் படைகளுக்கு 83 பயிற்சி நிலையங்கள்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 4:07PM by PIB Chennai
நாடு முழுவதும் மத்திய ஆயுதப் படைகளுக்காக மொத்தம் 83 பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேவையின் அடிப்படையில் இந்தப் பயிற்சி மையங்கள் நவீனமயமாக்கப்படுவதுடன், மோட்டார் வாகனங்கள் வாங்குதல் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் அறிமுகம் மற்றும் போதிய பயிற்சியாளர்களை நியமித்தல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல்துறைக்குப் புதிய ' மத்திய வனம்சார் போர்முறை கல்லூரி' (Central Jungle Warfare College) மற்றும் பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கான பிராந்திய பயிற்சி மையம் ஆகியவற்றை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297623®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2297952)
आगंतुक पटल : 9