சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் 146 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்பட்டன

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:32PM by PIB Chennai

பொது சுகாதாரம், மருத்துவமனைகள் ஆகியவை மாநிலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டயாலிசிஸ் சேவை உட்பட சுகாதார உள்கட்மைப்பை வலுப்படுத்துவதற்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு தொழில்நுட்பம், நிதியுதவி வழங்குகிறது.

நாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனைகள், இதர சுகாதார வசதி அமைப்புகளில் டயாலிசிஸ் மையங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஹீமோடயாலிசிஸ் சேவைகளைத் தகுதியுடைய நோயாளிகளுக்கு அளிப்பதை மேம்படுத்த பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் அளித்த தகவலின்படி இத்திட்டம் தற்போது 751 மாவட்டங்களில் 13,535 ஹீமோடயாலிசிஸ் இயந்திரங்களுடன் 1856 மையங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தயாரித்த ஆண்டு திட்ட செயலாக்க திட்டங்களின் மூலம் பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த, பரிந்துரைகள் தேசிய திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பரிசீலணை செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்படுகின்றன.

 

தமிழ்நாட்டில், 2024-2025-ம் நிதியாண்டில் 141 டயாலிசிஸ் மையங்களும் 2025-2026-ம் நிதியாண்டில் 146 டயாலிசிஸ் மையங்களும் பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டன.

இத்தகவலை, மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297506&reg=3&lang=1

***

SS/IR/PS/SH

 


(रिलीज़ आईडी: 2297878) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi