பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் சுயசரிதையைப் பிரதமர் ஆகஸ்ட் 12 அன்று வெளியிடுகிறார்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:22PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர்  திரு ராம் நாத் கோவிந்த் எழுதியுள்ள “இந்திய குடியரசின் வெற்றி : எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பிலான சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான்  பவனில் 2026 ஆகஸ்ட் 12 அன்று காலை 9.30-மணிக்கு வெளியிடுகிறார்.

இந்தியாவின் மிகச்சிறப்புமிக்க பொது ஆளுமைகளுள் ஒருவரின் வாழ்க்கையையும் பங்களிப்புகளையும் கொண்டாடும் வகையில் இந்த சுயசரிதையைப் பிரதமர் வெளியிடுவது முக்கிய நிகழ்வாக இருக்கும். திரு ராம் நாத் கோவிந்தின் சிறப்புமிக்க வாழ்க்கை பயணத்தை தனித்துவமிக்க நோக்கில் விளக்கக்கூடிய இந்த சுயசரிதை, அவருடைய தொடக்ககால வாழ்க்கை முதல் சிறப்புமிக்க பொது வாழ்வு, நாட்டின் 14-வது குடியரசுத்தலைவராக ஆற்றிய பணி அனுபவங்கள், போராட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. அவருடைய பயணத்தையும் பொதுச் சேவையையும் வடிவமைத்த மாண்புகள், அனுபவங்கள், சூழல்கள் குறித்த நுண்ணிய பார்வைகளை இந்த சுயசரிதை விளக்குகிறது.

***

(Release ID: 2297496)

SS/IR/PS/KR    


(रिलीज़ आईडी: 2297597) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Bengali , Bengali-TR , Odia , English , Manipuri , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam