நிதி அமைச்சகம்
மும்பையிலிருந்து நைஜீரியாவிற்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளை வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 5:03PM by PIB Chennai
போதைப்பொருள் மற்றும் மனநலனைப் பாதிக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றின் சட்ட விரோத உற்பத்தி, சர்வதேச அளவிலான கடத்தலுக்கெதிராக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அந்தவகையில், 2026 ஆகஸ்ட் 8 அன்று மும்பை விமான சரக்கு போக்குவரத்து வளாகத்தில் நைஜீரியாவிற்கு அனுப்பப்பட இருந்த சரக்கு ஒன்றைக் கண்டறிந்தது. அதில், 300 மில்லிகிராம் பிரிகபாலின் மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. மேற்கொண்டு நடைபெற்ற சோதனையில் ஏற்றுமதிக்காக அந்த சரக்கிற்குள் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டிரமடால் ஹைட்ரோ குளோரைடு மாத்திரைகளும், 1 லட்சம் டேபன்டால் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297182®=3&lang=1
****
TV/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297375)
வருகையாளர் எண்ணிக்கை : 37