வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏற்றுமதி சார்ந்த சான்றிதழ்களுக்குச் சுங்கக் கட்டண ரசீதுகளை நேரில் சமர்ப்பிக்கும் நடைமுறை ரத்து: டிஜிஎஃப்டி அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 1:29PM by PIB Chennai

ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம், (டிஜிஎஃப்டி) முன்கூட்டிய அங்கீகாரம், ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனப் பொருட்கள் போன்ற திட்டங்களின் கீழ், ஏற்றுமதி சார்ந்த சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும்போது, வரி செலுத்திய படிவங்களை நேரில் சமர்ப்பிக்கும் நடைமுறையை நீக்கியுள்ளது. சுங்கத் துறையிடமிருந்து  பெறப்பட்ட உரிமம், வரி செலுத்தியதற்கானத் தரவுகள், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் இணையத்தளத்துடன்  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது, சம்பந்தப்பட்ட அங்கீகாரத்துடன் வரி செலுத்தியதற்கான தரவுகளை நேரடியாக சரிபார்க்க உதவுகிறது.

1 ஆகஸ்ட், 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு வரி செலுத்தும் ஏற்றுமதியாளர்கள், இனி அதற்கான சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்வதற்கு, விண்ணப்பங்களுடன் வரி செலுத்தியதற்கான படிவங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை. இது வரி செலுத்தியதற்கான சரிபார்க்கப்பட்ட விவரங்கள், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் வாடிக்கையாளர் இணையதளத்தில் ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்க வகை செய்கிறது. இதன் மூலம், விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, வரி செலுத்தப்பட்டது தொடர்பான சம்பந்தப்பட்ட அங்கீகாரத்துடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்க முடியும்.

வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் அலுவலகத்தில் உள்ள மண்டல அதிகாரிகளுக்கும் இந்த சரிபார்க்கப்பட்ட கட்டணப் பதிவு குறித்த விபரங்கள் கிடைக்கும். இது விரைவான செயலாக்கத்தை எளிதாக்குவதுடன், தவிர்க்கக்கூடிய கடிதப் பரிமாற்றங்களைக் குறைக்கும். மேலும், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் மண்டல அதிகாரிகளிடையே முடிவெடுப்பதில், அதிக நிலைத்தன்மையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297013&reg=3&lang=1

***

SS/SV/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2297121) வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Malayalam