மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 11:38AM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி தேர்வுக்குத் தகுதியுடையவர்களிடமிருந்து மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இது குறித்து விளம்பர எண்.10/2026-ல் இடம்பெற்றுள்ள விரிவான தகவல்கள் ஆணையத்தின் https://upsc.gov.in. என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுடையவர்கள் https://upsconline.nic.in/ora/ என்ற ஆன்லைன் பணியாளர் தேர்வு விண்ணப்ப இணையப் பக்கத்தில் லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வரும் பணிகளைத் தவிர மற்றவைக்கு 2026 ஆகஸ்ட் 08 முதல் 2026 ஆகஸ்ட் 28 வரையிலும், லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வரும் பணிகளுக்காக 2026 செப்டம்பர் 4 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் விரிவான தகவல்களில் இடம்பெற்றுள்ளவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

***

(Release ID: 2296966)

SS/IR/GS/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2297041) வருகையாளர் எண்ணிக்கை : 65
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati