புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தியில் இந்தியா 300 ஜிகாவாட் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மின் உற்பத்தித் திறனை எட்டியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2026 2:31PM by PIB Chennai

நாட்டின் தூய்மையான எரிசக்தி மாற்ற இலக்குகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா 2026 ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, புதைபடிவ எரிபொருள் அல்லாத நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 300 ஜிகாவாட் என்ற உற்பத்துத் திறனைக் கடந்துள்ளது. இது 2030-ம் ஆண்டிற்குள் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 500 ஜிகாவாட் திறனில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

புதைபடிவமற்ற எரிபொருள் பிரிவுகளின் உற்பத்தித் திறன் விவரம் (31.07.2026 நிலவரப்படி):

சூரிய சக்தி: 164.59 ஜிகாவாட்

காற்றாலை சக்தி: 58.14 ஜிகாவாட்

நீர் மின்சக்தி: 57.24 ஜிகாவாட்

உயிரி ஆற்றல்: 11.75 ஜிகாவாட்

அணுசக்தி: 8.78 ஜிகாவாட்

புதைபடிவமற்ற மொத்தத் திறன்: 300.50 ஜிகாவாட்

நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறன் தற்போது சுமார் 552 ஜிகாவாட் ஆகும். இதில் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனின் பங்கு 54 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

இந்த மகத்தான சாதனையானது, தற்சார்பு எரிசக்தி சூழலமைப்பை உருவாக்குவதிலும், 2030-ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் என்ற இலக்கை அடைவதிலும் இந்தியா அடைந்துவரும் விரைவான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

 2014-ல் வெறும் 2.8 ஜிகாவாட்டாக இருந்த சூரிய ஆற்றல், தற்போது சுமார் 165 ஜிகாவாட்டாக உயர்ந்து, முக்கிய வளர்ச்சியாகத் திகழ்கிறது. அதே சமயம், காற்றாலை மின் துறையும் 2014-ல் 21 ஜிகாவாட்டாக இருந்து, தற்போது 58 ஜிகாவாட்டைத் தாண்டி வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296782&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296859) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam