சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய பல்லுயிர் ஆணையம், பயன் பகிர்வு நிதியாக 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ₹3.79 கோடியை வழங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2026 10:46AM by PIB Chennai
தேசிய பல்லுயிர் ஆணையம் அணுகல், பயன் பகிர்வு நிதியாக, 33 மாநில பல்லுயிர் வாரியங்கள், யூனியன் பிரதேச பல்லுயிர் மன்றங்கள், தேசிய தாவர மரபணு வளங்கள் அமைப்பு, ஹிசார் மாடுகள் விந்தணு நிலைய ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கு ₹3.79 கோடியை வழங்கியுள்ளது.
இதில் இந்தியாவின் பல்வேறு வகையான வேளாண் பல்லுயிர்கள் அடங்கும். ஆராய்ச்சி, வணிகப் பயன்பாட்டிற்காக காய்கறி, எண்ணெய் வித்துக்களின் மரபணு வளங்களை அணுகுவதற்காக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து இந்த தொகை பெறப்பட்டது.
அந்தந்த பயிர் சாகுபடியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியதன் விளைவாக, அணுகல், பயன் பகிர்வு தொகையின் பங்கு மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு ₹16.57 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதி பெறும் மாநில பல்லுயிர் வங்கிகள், நகர்ப்புற பல்லுயிர் வங்கிகள் ஆகியவை, பல்லுயிர் பதிவேடுகளைத் தயாரித்தல், புதுப்பித்தல், பல்லுயிர் பாரம்பரியத் தளங்களை வலுப்படுத்துதல், பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களின் திறன் மேம்பாடு போன்ற செயல்பாடுகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.
தேசிய பல்லுயிர் ஆணையத்தால் வழங்கப்பட்ட மொத்த நிதி தற்போது ₹166 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நிதி விடுவிப்பு பல்லுயிர் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, இந்தியாவின் வளமான உயிரியல் வளங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296731®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296759)
வருகையாளர் எண்ணிக்கை : 48