கூட்டுறவு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, நாளை மும்பையில் என்யுசிஎஃப்டிசி-யின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 7:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவின் மூலம் வளம் என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, நாளை (2026 ஆகஸ்ட் 8) மும்பை, ஃபோர்ட், ஷார்தா சதனில் உள்ள தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி, மேம்பாட்டுக் கழகமான என்யுசிஎஃப்டிசி-யின் (NUCFDC) புதிய அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், திரு அமித் ஷா, மகாராஷ்டிராவின் மாநில நகர்ப்புற கூட்டுறவு வங்கி கூட்டமைப்புகள், மாவட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுகிறார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, பிஎஸ்இ சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸும் கலந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, என்யுசிஎஃப்டிசி, தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்படும். இந்த ஒத்துழைப்பு, நகர்ப்புற கூட்டுறவு வங்கித் துறையில் இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பத் திறன்கள், நிறுவனத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296306®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296643)
வருகையாளர் எண்ணிக்கை : 36