மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
08 AUG 2026 4:51PM by PIB Chennai
தில்லி இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐஐடி) 57-வது பட்டமளிப்பு விழா, பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் இன்று (08.08.2026) அதன் வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் தமது உரையில், பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வடிவமைப்பதில் புத்தாக்கம், ஆராய்ச்சி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியா புதிய எல்லைகளுக்குள் நுழைவதாகவும், மிகுந்த பொறுப்புடனும் எதிர்பார்ப்புகளுடனும் இளைஞர்களை நோக்குவதாகவும் குறிப்பிட்ட பிரதமர், செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள், முக்கிய கனிமங்கள், ஆழ்கடல் ஆய்வு, குவாண்டம் கணினி போன்ற துறைகள் நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியம் என வலியுறுத்தினார். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்குமாறும், இந்த அதிநவீனத் துறைகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் இளைஞர்களை ஊக்குவித்தார்.
57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் கல்விச் சூழலமைப்பு மாணவர்களை மையமாகக் கொண்டதாகவும், ஆராய்ச்சி சார்ந்ததாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாறியுள்ளது என்று கூறினார். நாட்டின் இளைஞர்கள் இனி உலகத்துடன் வெறும் போட்டியாளர்களாக இல்லாமல், உலகை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். இந்திய இளைஞர்களின் ஆற்றல் மீது பிரதமர் எப்போதுமே மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக திரு பிரல்ஹாத் ஜோஷி எடுத்துரைத்தார்.
குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கம், இயக்குநர் தங்கப் பதக்கம், சங்கர் தயாள் சர்மா தங்கப் பதக்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க விருதுகளைத் தகுதிவாய்ந்த மாணவர்களுக்குப் பிரதமர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அவர் தில்லி ஐஐடி-யில் 'பரம் பிரக்யா' செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உயர் செயல்திறன் சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியையும் பிரதமர் திறந்து வைத்தார். இது நாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296555®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2296623)
आगंतुक पटल : 7