வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்த, தொழில் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்து

प्रविष्टि तिथि: 08 AUG 2026 2:45PM by PIB Chennai

வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தொழில் - உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி, முக்கியத் தொழில் நிறுவனங்களுடன் தொடர்ச்சியான உத்திசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

டிஜிட்டல் பணப் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பு, நிதித் தொழில்நுட்பத் தீர்வுகள், திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம், டிபிஐஐடி-யால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில், கேஷ்ஃப்ரீ பேமெண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிபிஐஐடி கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பானது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் கேஷ்ஃப்ரீ பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்தியாவில் தொழில்முனைவோர் மேம்பாட்டை வலுப்படுத்தவும், புத்தாக்கத்தால் உந்தப்பட்ட புத்தொழில் சூழலை வளர்க்கவும், டார்வின் டைனமிக்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிபிஐஐடி கையெழுத்திட்டுள்ளது. இது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் தொழில்முனைவை ஊக்குவிப்பதன் மூலம் 'ஸ்டார்ட்அப் இந்தியா' முன்முயற்சியை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வல்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தத்தில் டிபிஐஐடி கையெழுத்திட்டுள்ளது.  இந்தக் கூட்டு முயற்சியானது, அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

இவை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த, புதுமையை மையமாகக் கொண்ட புத்தொழில் நிறுவனச் சூழலமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296491&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2296581) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam