பாதுகாப்பு அமைச்சகம்
சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை இசைக்குழுவின் நிகழ்ச்சி
प्रविष्टि तिथि:
08 AUG 2026 2:50PM by PIB Chennai
சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தின் 'பரம் யோதா ஸ்தல்' வளாகத்தில், 2026 ஆகஸ்ட் 9 அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்திய விமானப்படை இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் அதே வேளையில், பொதுமக்களுடனான ஈடுபாட்டின் மூலம், நாட்டுப்பற்றை வளர்ப்பதே இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
32 விமானப்படை வீரர்கள், 8 அக்னிவீர் வாயு வீரர்கள் (இவர்களில் மூன்று பெண்கள் அடங்குவர்) கொண்ட இசைக்கலைஞர்கள் குழு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறது. பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் வகையில்,சிறப்பான நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். நாட்டுப்பற்று, மனதை நெகிழ வைக்கும் பாடல்களை உள்ளடக்கிய தொகுப்புடன், உற்சாகமான இசை நிகழ்ச்சியின் மூலம் இந்திய விமானப்படை இசைக்குழு தேசப்பற்று உணர்வை மேலோங்கச் செய்யவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் முதன்மை இசை நடத்துநராக மாஸ்டர் வாரண்ட் அதிகாரி ஏ. ஸ்ரீஹரி செயல்படுவார்.
***
(Release ID: 2296494)
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2296531)
आगंतुक पटल : 16