இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் 2026 பதக்க வெற்றியாளர்களுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

प्रविष्टि तिथि: 04 AUG 2026 5:32PM by PIB Chennai

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் மாற்றுத்திறனாளி தடகளப் பிரிவுகளில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு விழா நடத்தினார்.

போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்குத் தங்கம் வென்றவருக்கு ரூ.30 லட்சமும், வெள்ளிக்கு ரூ.20 லட்சமும், வெண்கலத்திற்கு ரூ.10 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "விளையாட்டு வீரர்கள் தங்களது ஓய்வுக்குப் பிறகு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க விளையாட்டு அகாடமிகளைத் தொடங்க வேண்டும். ரூ.36,000 கோடி முதலீட்டில் விரிவாக்கப்பட்ட 'கேலோ இந்தியா' திட்டம் இந்திய விளையாட்டின் தொடர் வளர்ச்சிக்கு உறுதியளிக்கும்" எனக் கூறினார். மேலும் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும்  வீரர்கள் இந்த வெற்றியின் வேகத்தைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தினார்.

இப்போட்டியில் இந்திய குத்துச்சண்டை அணி 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களைக் கைப்பற்றிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஜூடோவில் அஸ்மிதா டே மற்றும் ஹர்ஷ் சிங் காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2294406&reg=3&lang=1    

***

 TV/VK/SE


(रिलीज़ आईडी: 2295811) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati , Telugu