சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சிவி பில்டர், அனுபவ வழிக் கற்றல் திட்டங்கள் அறிமுகம்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 4:18PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 'மை பாரத்' டிஜிட்டல் தளம் மூலம் இளைஞர்களின் பங்களிப்பையும் அதிகாரமளிப்பையும் தீவிரப்படுத்தி வருகிறது. இத்தளம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 2.46 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் இதில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்திய அஞ்சல் துறை, மக்கள் மருந்தகம், பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும் சுமார் 25,000 அனுபவவழிக் கற்றல் திட்டங்களில் 1.22 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்.

இத்தளத்தில் 'பாஷினி' அமைப்புடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சிவி பில்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதி இளைஞர்களும் இத்திட்டங்களைப் பெற ஏதுவாக, நாடு முழுவதும் உள்ள 780-க்கும் மேற்பட்ட மாவட்ட இளைஞர் அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக 'மை பாரத்' தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295490&reg=3&lang=1   

***

 TV/EA/SE


(रिलीज़ आईडी: 2295778) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Malayalam