நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கச் சீர்திருத்தங்கள், தனியார் துறைப் பங்களிப்பை ஊக்குவித்தல் குறித்து விவாதித்தது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 11:16AM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு புதன் கிழமை அன்று கூடி வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கச் சீர்திருத்தங்கள், தனியார் துறைப் பங்களிப்பை ஊக்குவித்தல் தொடர்பாக விவாதித்தது. இக்கூட்டத்திற்கு மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமை தாங்கினார். நிலக்கரி அமைச்சக செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், அமைச்சக உயர் அதிகாரிகள், நிலக்கரிப் பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது உரையாற்றிய திரு கிஷன் ரெட்டி, கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சீர்திருந்ததங்களின் வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்க நடவடிக்கை சிறந்த உதாரணம் என்று தெரிவித்தார். ஏற்கனவே வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஏலத்தின் 14 சுற்றுகள் நிறைவடைந்துள்ளதாகவும், 15-வது சுற்று ஏலம் தற்போது நடைபெற்று வருவதாகவும் உறுப்பினர்களிடம் அவர் கூறினார். வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்க நடவடிக்கை அதிக போட்டித்தன்மை மிக்கதாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295327®=3&lang=1
***
VJ/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2295365)
आगंतुक पटल : 9