ரெயில்வே அமைச்சகம்
ரயில் பெட்டிகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க, பல்லடுக்குத் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் - ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 3:24PM by PIB Chennai
ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய தீ விபத்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவசர காலங்களில் விரைந்து செயல்படவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் ரயில்வே அனைத்து மண்டலங்களிலும் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில் நிலையங்களில், ரயில்வே மேற்கொண்டு வரும் முக்கிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகள்:
தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்துவதற்காக ரயில் நிலையங்களில் கையடக்கத் தீயணைப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.
தீ விபத்துகளின் போது பயன்படுத்துவதற்காக மணல், தண்ணீர் நிரப்பப்பட்ட தீயணைப்பு வாளிகளும் ரயில் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவசர காலச் சூழல்களைக் கையாளும் வகையில் களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதை ரயில்வே உறுதி செய்கிறது.
இதற்காக, நிலைய மேலாளர்கள், ரயில் மேலாளர்கள் (கார்டுகள்), பயணச்சீட்டு வழங்குநர்கள், லோகோ பைலட்டுகள் (ஓட்டுநர்கள்), உதவி லோகோ பைலட்டுகள் போன்ற களப்பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களில் தீயணைப்பு, முதலுதவி, பேரிடர் மேலாண்மை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்பு நடவடிகைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரயில் குழுவினர், ரயிலில் பயணிக்கும் ஊழியர்களுக்கு (டிக்கெட் பரிசோதகர்கள், ஏசி பெட்டி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் போன்றவை) பயிற்சி அளிக்க, ரயில்வே பேரிடர் மேலாண்மை நிறுவனம் தீயணைப்பு, முதலுதவி, அதிர்ச்சி மேலாண்மை போன்றவற்றில் வழக்கமான பயிற்சிகளை நடத்துகிறது.
ரயில்களுக்கான தீ பாதுகாப்பு நடவடிக்கைகள், ரயில்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, இயக்கம் ஆகிய அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியுள்ளன.
மேற்கூறிய நடவடிக்கைகள் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க உதவிய போதிலும், பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடிய தீ விபத்துகள் போன்ற அவசர காலச் சூழல்களைத் திறம்பட எதிர்கொள்ளவும் ரயில்வே தயாராக உள்ளது.
மக்களவையில் இன்று ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294810®=3&lang=1
(Release ID: 2294810)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295238)
आगंतुक पटल : 5