தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கம்பிவடம், கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைகளுக்கானத் தரநிலைகளுக்கான ஒழுங்கு முறை விதிகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை ட்ராய் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
05 AUG 2026 2:48PM by PIB Chennai
தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கம்பிவடம், கம்பியில்லா சேவைகள், அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான தரநிலைகள் குறித்த ஒழுங்குமுறை விதிகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இன்று வெளியிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆட்சேபனைகள் கோரப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2024-ல், ட்ராய் முந்தைய சேவைத் தரநிலை சார்ந்த கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்து, கம்பிவடம், கம்பியில்லாத் தொலைத்தொடர்பு சேவை, அகண்ட அலைவரிசை சேவைகளுக்கானத் தரநிலைகள் சார்ந்த ஒழுங்குமுறை விதிகள் என்ற ஒருங்கிணைந்த விதிமுறைகளை 2024 ஆகஸ்ட் 2 அன்று ட்ராய் அறிவித்தது. தொழில்நுட்பம் சாராத செயல்திறன் தரநிலைகள், வலுப்படுத்தப்பட்ட அறிக்கை அளிக்கும் வழிமுறைகள், வாடிக்கையாளர்களுக்கான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், சேவைகளுக்கான அணுகுமுறை, அகண்ட அலைவரிசை சேவைகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான மேம்படுத்தப்பட்ட சேவைத் தரக் கட்டமைப்பை இந்த ஒழுங்குமுறை விதிகள் வழங்குகின்றன. இந்த ஒழுங்குமுறை விதிகள் 2024 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த ஒழுங்குமுறை விதிகளைச் செயல்படுத்தும்போது பெறப்பட்ட அனுபவம், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நம்பகமான, உயர்தர டிஜிட்டல் இணைப்புக்கான வாடிக்கையாளரின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், அமலாக்கத்தின் போது கண்டறியப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும், சேவைகளுக்கான தரக் கட்டமைப்பின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதும் அவசியமாகக் கருதப்படுகிறது.
வரைவு அறிவிப்பில் முன்மொழியப்பட்ட திருத்தம் அல்லது விதிமுறைகளின் பிற தொடர்புடைய அம்சங்கள் குறித்த எழுத்துப்பூர்வமான கருத்துகள், ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின், அவற்றை முறையே 2026 ஆகஸ்ட் 26, 2026 செப்டம்பர் 7 ஆகிய தேதிகளுக்குள் adv-qos1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு ட்ராய் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294779®=3&lang=1
(Release ID: 2294779)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295175)
आगंतुक पटल : 4