தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் இதுவரை 10.05 கோடிக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன

प्रविष्टि तिथि: 05 AUG 2026 8:58AM by PIB Chennai

வேலைவாய்ப்புத் தேடுவோர், வேலைவாய்ப்பு அளிப்போர் ஆகியோருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பைத் தேடுவோரை பதிவு செய்தல், வேலைவாய்ப்புக் குறித்த தகவல்களை நிறுவனங்களிடமிருந்து சேகரித்தல், தொழில் மற்றும் ஆலோசனை வழிகாட்டுதல் ஆகிய சேவைகளை வழங்குவதற்காக தேசிய வேலைவாய்ப்புச் சேவையை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.  இந்தத் தேசிய வேலைவாய்ப்புச் சேவை தேசிய பணிச் சேவை என்று மாற்றப்பட்டுள்ளது. [www.ncs.gov.in] என்ற இணையதளத்தின் மூலம் இச்சேவை அளிக்கப்படுகிறது.  இது தனியார் துறை, அரசுத் துறை வேலைவாய்ப்புகள், ஆன்லைன், நேரடி வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் தொழில் ஆலோசனை, திறன் மேம்பாட்டுப் படிப்புகள், பயிற்சித் திட்டங்கள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த இணையதளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 6.64 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.  10.05 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இடம் பெற்றன.  இதில் 2026 ஜூலை 15 நிலவரப்படி 17.68 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

இத்தகவலை, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் 2026 ஆகஸ்ட் 3 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294658&reg=3&lang=1

****

TV/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2295082) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Telugu