பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2-வது பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் ஐதராபாதில் தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 AUG 2026 2:02PM by PIB Chennai
2-வது பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் ஐதராபாதில் நடைபெற்றது. இக்கூட்டத்துடன் இணைந்து, சொத்து மீட்பு தொடர்பான பிரிக்ஸ் நிபுணர்கள் அமைப்பின் 2-வது கூட்டமும் இன்று தொடங்கியது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலாளர் திருமதி ரச்னா ஷா, நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு எந்தவொரு நாடும் புகலிடமாக மாறக்கூடாது என்பதை வலியுறுத்திய அவர், குற்றவாளிகளைக் கண்டறிதல், நாடு கடத்துதலுக்கு உதவுதல் மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என அழைப்பு விடுத்தார்.
மேலும், தொழில்நுட்ப அடிப்படையிலான சிறந்த ஆளுமை குறித்துப் பேசிய அவர், 'அரசு மின்-சந்தை', நேரடிப் பணப்பரிமாற்றம் மற்றும் காகிதமற்ற வரிவிதிப்பு முறைகள் போன்றவை ஊழலைக் குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் பெரிதும் உதவுவதாகச் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு பணிக்குழு தலைவர் திரு. ஜே. அசோக் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294197®=3&lang=1
****
TV/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2294642)
வருகையாளர் எண்ணிக்கை : 38