குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்எஸ்எம்இ நிலையான சான்றிதழ் திட்டம் : தரம், நிலைத்தன்மை,பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை வலுப்படுத்துதல்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 11:22AM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், எம்எஸ்எம்இ நிலையான சான்றிதழ் திட்டத்தின் மூலம் தரத்தை மையமாகக் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உற்பத்தி முறைகளை ஊக்குவிக்கிறது. தரமான மற்றும் நிலையான உற்பத்தித் துறையில் பெண் தொழில்முனைவோரின் பங்கேற்பை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவு சார்ந்த தடையைக் குறைப்பதற்காக, அவர்களுக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஜெட் (ZED) சான்றிதழ் பெறுவதற்கான செலவில் 100% மானியத்தை அரசு வழங்கியுள்ளது. இந்தத் திட்டம், 2023 நவம்பர் 11 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது; இதன் மூலம், தகுதியுள்ள பெண்கள் தலைமையிலான எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான செலவு நடைமுறையில் பூஜ்ஜியமாகிறது.

 

2026 ஜூலை 7 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் சுமார் 9.49 லட்சம் எம்எஸ்எம்இ  நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன; மேலும், 6.67 லட்சத்திற்கும் அதிகமான வெண்கல சான்றிதழ்களும், 6,700 வெள்ளி சான்றிதழ்களும், 4,800 தங்க சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் தரமான மற்றும் நிலையான உற்பத்தி நடைமுறைகளைக் கடைப்பிடிக்க உதவும் வகையில், இத்திட்டம் ₹913 கோடிக்கும் அதிகமான நிதியுதவியையும் வழங்கியுள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294133&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2294487) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Telugu