வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டில் வரலாற்றுச் சாதனைப் படைத்த பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியாவைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 3:18PM by PIB Chennai

கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிப் போட்டியில் தொடந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றுச் சாதனைப் படைத்துள்ள பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு புதுதில்லியில் இன்று மத்தியத் தொலைத் தொடர்பு, வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியாவைச் சந்தித்தார்.

மீராபாய் சானுவின் சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்த திரு சிந்தியா, அவருடைய இணையற்ற உறுதிப்பாடு, ஒழுக்கம், விடாமுயற்சி ஆகியவற்றை புகழ்ந்துரைத்தார். அவருடைய வெற்றி நாடு முழுவதும் உள்ள குறிப்பாக வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவில் பெருமளவில் கொண்டாடப்படக்கூடிய விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்வதற்கு தனது பாதையில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் உத்வேகமிக்க பயணம் குறித்தும் மீராபாய் சானு பகிர்ந்து கொண்டார். விளையாட்டுப் பயிற்சி முறைகள், ஊட்டச்சத்து, சிறந்த செயல்பாட்டிற்கானத் தேவையான ஓய்வு, தூக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்ட விளையாட்டுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருடன் அமைச்சர் விரிவாக உரையாடினார். உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, ஆதரவு மூலம் மேலும் பல மீராபாய் சானு போல பல்வேறு விளையாட்டு வீரர்களை வடகிழக்குப் பிராந்தியம் அவசியம் உருவாக்க வேண்டும் என்று திரு சிந்தியா அப்போது குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293757&reg=3&lang=1     

***

TV/IR/SM/SE


(रिलीज़ आईडी: 2294022) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Manipuri , Telugu