பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் ஊழல் தடுப்புப் பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் ஐதராபாதில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 03 AUG 2026 2:41PM by PIB Chennai

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் 2026-ன் கீழ் தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் 2026 ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் ஊழல் தடுப்புப் பணிக்குழுவின் 2-வது கூட்டத்தையும், சொத்து மீட்புக் குறித்த பிரிக்ஸ் நிபுணர் கட்டமைப்பின் 2-வது கூட்டத்தையும் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நடத்துகிறது.

இக்கூட்டத்தை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்வில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உயர்கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள், பயிற்சியாளர்கள், ஊழல் தடுப்பு, சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற முதலாவது பிரிக்ஸ் ஊழல் தடுப்புப் பணிக்குழு கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் ஐதராபாதில் இக்கூட்டம் நடைபெறுகிறது. சொத்து மீட்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் எல்லைத் தாண்டிய ஊழலுக்கு எதிராகச் செயல்படுதல் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் மேம்படுத்துதல் குறித்து பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293734&reg=3&lang=1

***

VJ/PD/IR/SM/SE


(रिलीज़ आईडी: 2293970) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu