பாதுகாப்பு அமைச்சகம்
சவால்களை எதிர்கொள்வதற்கான வலுவான பாதுகாப்புச் சூழலமைப்பிற்கு, ராணுவம்-குடிமைப்பணி நிர்வாக ஒருங்கிணைப்பு அவசியம்:பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 2:35PM by PIB Chennai
பாதுகாப்புப் படைகள் புதிய உத்வேகத்துடன் ஒன்றிணைந்த செயல்பாட்டுடன் முன்னேறி வரும் நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவம், குடிமைப்பணி பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
புது தில்லியில் இன்று (2026 ஆகஸ்ட் 3) நடைபெற்ற 85-வது ஆயுதப் படைகள் தலைமையக குடிமைப் பணிகள் தின விழாவில் உரையாற்றிய அவர், மாறிவரும் பாதுகாப்பு, தொழில்நுட்பம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கும், நிறுவன ரீதியிலான அனுபவ அறிவு, ஸ்திரத்தன்மை, விதிமுறைகளின் பயனுள்ள அமலாக்கத்தை உறுதி செய்யவும் இத்தகைய ஒருங்கிணைப்பு அவசியம் என்று தெரிவித்தார்.
சீருடைப் பணியாளர்கள், குடிமைப் பணி அதிகாரிகள் தேசமே முதன்மையானது என்ற ஒரே அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிக்கோள் ஒன்றாக இருக்கும்போது, பல்வேறு அமைப்புகளின் ஒவ்வொரு அங்கமும், வலிமையான நாடாக உருவெடுக்கச் செய்கிறது என்றும் அவர் கூறினார்.
ராணுவம், நிர்வாக அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, கொள்கை, நிர்வாகம், மனிதவள மேலாண்மை, நிதி சார்ந்த செயல்முறைகள், தளவாடங்கள், நிறுவன ரீதியிலான அறிவு போன்ற அனைத்துத் துறைகளிலும், தொடர் நிபுணத்துவமும் இன்றியமையாதது என்று கூறினார். குடிமைப் பணி அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, பரஸ்பரம் அனுபவம் சார்ந்த பரிமாற்ற நடைமுறைகளை மேலும் மேம்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293732®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2293966)
आगंतुक पटल : 12