சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 32,138 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 1:47PM by PIB Chennai
நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 6 சிறுபான்மைச் சமூகங்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கு பிரதமரின் பாரம்பரிய மேம்பாடுத் திட்டத்தைச் சிறுபான்மையினர் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. திறன் மேம்பாடு, பயிற்சி, தலைமைத்துவம், தொழில்முனைவு மற்றும் கல்வி போன்ற பல்வேறு அம்சங்களைச் செயல்படுத்தத் தகுதி உடைய திட்டச் செயலாக்க முகமைகள், அரசு நிறுவனங்கள், மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், சிறுபான்மையினர் சமூக நிறுவனங்கள், அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது சிறப்புமிக்க நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 59 திட்டச் செயலாக்க முகமைகளுக்கு 1.56 லட்சம் பயனாளிகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 32,138 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான கேள்விக்குப் பதில் அளித்தபோது இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293705®=3&lang=1
***
VJ/PD/IR/SM/KR
(रिलीज़ आईडी: 2293858)
आगंतुक पटल : 12