சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
வாகனங்களுக்கிடையேயானத் தகவல் தொடர்பு முறைகளை அமல்படுத்துவதற்கான வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
03 AUG 2026 1:20PM by PIB Chennai
வாகனங்களுக்கிடையேயானத் தகவல் தொடர்பு முறைகளை (வி2வி) படிப்படியாக அமல்படுத்துவதற்காக மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு அறிவிக்கையைச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வாகனங்களுக்கிடையேயானத் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் அருகே செல்லும் வாகனங்களின் வேகம், இருப்பிடம், திசை, இயக்கம் உள்ளிட்டத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். திடீர் பிரேக் பயன்பாட்டால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை நிறுத்துதல், முன்னே செல்லும் வாகனத்துடன் மோதும் அபாயம், பாதுகாப்பற்ற முறையில் சாலை வழித்தடம் மாறுதல், அவசர ஊர்திகளின் இயக்கம் உள்ளிட்ட சூழ்நிலைகளில் ஓட்டுநர்கள் அல்லது வாகன அமைப்புகளுக்கு முன்கூட்டியே இந்தத் தகவல்கள் மூலம் எச்சரிக்கைகளை அளிக்க முடியும்.
2027 அக்டோபர் 1-ம் தேதியன்று அல்லது அதன் பிறகு தயாரிக்கப்படும் எல் (இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள்) எம் (கார், பேருந்து), என் (கனரக வாகனங்கள்) வகையைச் சேர்ந்த வாகனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு அமைப்பு பொருத்தப்பட்டிருந்தால் அவை ஆட்டொமோடிவ் இந்திய தரநிலையைப் (ஏஐஎஸ்-230) பின்பற்ற வேண்டும்.
2028 அக்டோபர் 1-ம் தேதியன்று அல்லது அதன் பிறகு தயாரிக்கப்படும் எல், எம், என் வகையைச் சேர்ந்த வாகனங்களில் ஏஐஎஸ்-230 தரநிலைக்கு உகந்த தகவல் தொடர்பு அமைப்புகள் பொருத்தப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293692®=3&lang=1
***
VJ/PD/IR/SM/KR
(रिलीज़ आईडी: 2293856)
आगंतुक पटल : 11