பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு 2026-ல் இந்திய மகளிரின் சிறப்பான செயல்பாட்டை மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பாராட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 12:36PM by PIB Chennai
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு 2026-ல் இந்திய மகளிரின் சிறப்பான செயல்பாட்டை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பாராட்டியுள்ளார். குத்துச்சண்டை, பளு தூக்குதல், ஜூடோ, பாரா விளையாட்டுகள் ஆகியவற்றில் இந்தியா வென்ற 13 தங்கப்பதக்கங்களில் 8 பதக்கங்களை மகளிர் வென்றதன் மூலம் இந்திய அணியின் தங்கப்பதக்க முயற்சிக்கு மகளிர் சக்தி பெரும் உத்வேகம் அளித்தது என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர், இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் 5 பேர் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இவ்விளையாட்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கமும், திறமையும் வெளிப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களுடைய துணிச்சல், மனஉறுதி, திறமை ஆகியவை இந்திய விளையாட்டுத் துறையில் மகளிரின் குறிப்பிடத்தக்க எழுச்சியைப் பிரதிபலிப்பதாகவும், பெரும் கனவுகளைக் காணவும், சிறப்பாக விளங்கவும், உலக அளவில் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் வகையில் பிரதிநிதித்துவப்படுத்தவும் புதிய தலைமுறை மகளிருக்கு ஊக்கம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293633®=3&lang=1
***
VJ/PD/IR/SM/KR
(रिलीज़ आईडी: 2293847)
आगंतुक पटल : 9