பாதுகாப்பு அமைச்சகம்
எதிர்காலப் போர்முறை தொடர்பாக முப்படைகளின் பயிற்சி புதுதில்லியில் நாளை தொடங்குகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
02 AUG 2026 4:11PM by PIB Chennai
எதிர்காலப் போர்முறை தொடர்பான முப்படைகளின் பயிற்சி வகுப்பின் நான்காவது பதிப்பு, நாளை (2026 ஆகஸ்ட் 03) புதுதில்லியில் உள்ள மனேக்ஷா மையத்தில் தொடங்குகிறது. நான்கு வாரங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பானது, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஆதரவின் கீழ் நடத்தப்பட்டு, கூட்டுப் போர்முறை பயிற்சி மையத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்தப் பாடநெறியானது முப்படைகளின் அதிகாரிகளையும், அரசு அமைப்புகள், கல்வித்துறை, தொழில்துறை, சிந்தனைக் குழுக்களின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைக்கிறது. இந்தப் பாடத்திட்டமானது புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், இணையவழி போர், அறிவாற்றல் போர், தகவல் போர், தன்னாட்சி அமைப்புகள், தரை, கடல், விண்வெளித் தளங்களில் எதிர்கால நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் போர் உள்ளிட்ட பரந்த அளவிலான பாடங்களை உள்ளடக்கியுள்ளதாகும்.
மூத்த ராணுவ அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்துறைத் தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் வழங்கும் விரிவுரைகள் இதில் இடம்பெறும். இந்தப் பாடநெறியானது, சவால்கள் குறித்த ஒரு கூட்டுப் புரிதலை மேம்படுத்துவதையும், எதிர்காலப் போர்க்களங்கள் குறித்த விவாதங்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
****
(Release ID: 2293425)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2293487)
வருகையாளர் எண்ணிக்கை : 59