பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மைசூருவில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம்-விவேக ஸ்மரகத்தின் தொடக்க விழாவில் ஆற்றிய உரையின் சில அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2026 12:38AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, கர்நாடகாவின் மைசூருவில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம்-விவேக ஸ்மரகத்தின் தொடக்க விழாவில் தாம் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் மைசூரு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது."

"விவேக ஸ்மரகம், ஒரு சிறந்த சமுதாயத்திற்குப் பங்களிக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு துடிப்பான இடமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

"நமது இளைஞர்களின் ஆற்றல்களால், இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. தற்சார்பு பாரதம், இந்தியாவில் தயாரிப்போம் போன்ற முன்முயற்சிகளின் வெற்றிக்கு நமது இளைஞர்களின் ஆற்றலே உந்து சக்தியாக விளங்குகிறது."

"தேசிய கல்விக் கொள்கையானது, நமது தேசத்தின் இளைஞர்களை 21-ம் நூற்றாண்டின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தயார்படுத்துகிறது என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்."

****

(Release ID: 2293173)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2293463) வருகையாளர் எண்ணிக்கை : 53