சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலையான மீன் வளர்ப்பில் புரட்சி

प्रविष्टि तिथि: 01 AUG 2026 5:38PM by PIB Chennai

தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரான திரு ஆதித்யா ரித்விக் நர்ராவால் நிறுவப்பட்ட ஸ்மார்ட்கிரீன் அக்வாகல்ச்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழில்முனைவுப் பயணம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'பட்டியலின சமூகத்தினருக்கான துணிகர மூலதன நிதியம்' (VCF-SC) ஏற்படுத்திய மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்த நிறுவனம், மேம்பட்ட மறுசுழற்சி மீன் வளர்ப்பு முறையை பயன்படுத்தி, ரெயின்போ ட்ரவுட் வகை மீன்களை வளர்ப்பதற்கான அதிநவீன வசதியை நிறுவியுள்ளது. இத்திட்டம் மொத்தம் 36 லட்சம் லிட்டர் நீர் சுழற்சித் திறனையும், ஆண்டுக்கு 360 டன் மீன் உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளது. இதன் ஆற்றலை உணர்ந்து  துணிகர மூலதன உதவியின் மூலம், 2022-ஆம் ஆண்டில் பட்டியலின சமூகத்தினருக்கான துணிகர மூலதன நிதியமாக ரூ. 15 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2293018&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2293387) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati