சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இயந்திரமயமாக்கல் மற்றும் மறுவாழ்வு முயற்சிகள் மூலம் துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்பும் கண்ணியமும் வலுப்படுத்தப்படுகின்றன
प्रविष्टि तिथि:
31 JUL 2026 6:31PM by PIB Chennai
நமஸ்தே (ஒழுங்குபடுத்தப்பட்ட சுகாதாரச் சூழலமைப்பிற்கான தேசிய நடவடிக்கை) திட்டம் மற்றும் அடையாளம் காணப்பட்ட மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான சுகாதாரச் சேவைகள் என்ற நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், சுகாதாரப் பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பு, வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நமஸ்தே திட்டம், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் (கழிவுநீர்த் தொட்டி) துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், ஆபத்தான முறையில் கையால் சுத்தம் செய்யும் நடைமுறைகளுக்குப் பதிலாக இயந்திரமயமாக்கப்பட்ட தீர்வுகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
2013 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், நாடு முழுவதும் 58,098 மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களைக் கண்டறிந்தன. ஒருமுறை வழங்கப்படும் பண உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான நிதியுதவி ஆகியவற்றின் மூலம் இவர்களுக்கான மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292648®=3&lang=1
---
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2292818)
आगंतुक पटल : 10