சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் உணவு சோதனை முறையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 2:32PM by PIB Chennai

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) , உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரநிலைகளை வகுக்கவும், மனித நுகர்வுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும் உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ஐ அமல்படுத்துவதும் செயல்படுத்துவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பகிரப்பட்ட பொறுப்பாகும்.

சோதனை மூலம் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பிற்காக, எஃப்எஸ்எஸ்ஏஐ, 259 சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தை (என்ஏபிஎல்) அமைத்துள்ளது. உணவு மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்காகவும், 24 பரிந்துரை உணவு ஆய்வகங்களை மேல்முறையீட்டு மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்காகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292341&reg=3&lang=1    

***

TV/PKV/SE


(रिलीज़ आईडी: 2292749) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी